Kindly Login


  • amuchitraditionalfoodsindia@gmail.com
  • Order Food Online

Amuchi Traditional Foods

Quality Assured

Door Delivery Available

SHOP NOW

Useful Tips

NATTU SAKKARAI

நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது. இதயம் சம்பந்தமான நோய்கள ் ஏற்படாமல் தடுக்கும். வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

GROUNDNUT BALL soft

இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக ்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன. நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம். நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன

SESAME BALL soft

எள் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்ம ையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.

MILK GOA

பசும்பால் தாய்ப்பாலுக்கு இணையானது. ஃபோலிக் அமிலம் தயமின், பொட்டாசியம் நிறைந்தது. பசும்பாலில் அனைத்துவித அமினோஅமிலங்களும் உள்ளன. ஆனால், புரதத்த ின் அளவு குறைவு. கால்சியம், லாக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்குள் சென்று லாக்டிக் அமிலமாக மாறுகிறது.லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப்புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது. உயர் டிகிரி வெப்பத்தில் பாலைச் சுண்டக் காய்ச்சி, நீரை வெளியேற்றி, மீதம் தேங்கி உள்ள ஆடைக்கட்டியைக் குளிர்வித்தால், பால்கோவா கிடைக்கும்.உடலுக்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கும்.

GROUNDNUT BALL ( Palm Jaggery) soft

வேர்க்கடலையில் பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் எனப்படும் ரிபோப்ஃபிளேவின், நியாசின், தயாமின், பேண்டோதெனிக ஆசிட், விட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகியன அ டங்கியுள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்துக்கும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன. ... வேர்க்கடலையை வேக வைத்தாகிலும் வாணலியில் இட்டு வறுத்தாகிலும் பனை வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலை வளர்க்கும் உரமாக விளங்கும்....

kaju katli

முந்திரியில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். தசைப் பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, பதற்றம் மற்றும் மயக்கம் ஆக ியவற்றையும் சரிசெய்யும். இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு வலு சேர்க்கும். * இரும்புச்சத்தை உடல் கிரகிக்க இது உதவுகிறது; வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கிறது; எலும்புகள் மற்றும் திசுக்கள் வளர்வதற்குத் துணைபுரிகிறது; சருமம் மற்றும் கூந்தலின் நிறத்துக்குத் துணைபுரியும் மெலனினை (Melanin) உற்பத்திசெய்கிறது . வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால் தோல் சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கும்.

kadaknath Egg

கடக்நாத் எனும் கருங்கோழி இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தை பூர்விகமாக கொண்டது. இதனை நாட்டுக்கருப்பு, காளிமாசி’ கருஞ்சதை கோழி எனவும் அழை க்கப்படுகிறது. மற்ற கோழிகளில் 18 சதவீதம் புரதச் சத்துகள் உள்ளன. கடக்நாத் கோழியில் இறைச்சி மற்றும் முட்டை இரண்டும் 25 முதல் 27 சதவீதம் புரதச் சத்துகள் உள்ளது. இதில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளன கொழுப்பு சத்து மிக குறைவாக இருக்கும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடக்நாத் கோழிகளின் முட்டைகள் ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும். கடக்நாத் கோழிகளின் முட்டைகள் கடுமையான தலைவலி, பிரசவத்திற்குப் பிறகு தலைவலி, மயக்கம், ஆஸ்துமா மற்றும் நெஃப்ரிடிஸ் (சிறுநீரகத்தின் கடுமையான அல்லது நாள்பட்ட அழற்சி) ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க திறம்பட பயன்படுத்தப்படுகிறது.

Ghee

`நெய் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வந்துடும்' என்ற அளவில்தான் நெய்யைப் பற்றிய நம்முடைய புரிந்துணர்வு இருக்கிறது. ஆனால், நம் பாரம்பர்ய மருத்துவமுறைகளில் ப சு நெய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது. நெய்யின் மருத்துவ பலன்கள் உடலில் சூடு அதிகரிப்பதால் வருகிற கண் எரிச்சல், வயிற்று எரிச்சல், குடல் பிரச்னைகள், சரும வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் பசு நெய்யைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து மேலே சொன்ன பிரச்னைகள் படிப்படியாகச் சரியாகும். உடலின் உள்ளே ஏற்படுகிற காயங்களை பசு நெய் விரைவில் குணமாக்கும். பசு நெய் உடலினுள் இருக்கிற கழிவுகளை வெளியேற்றும். இதனால், புற்றுநோய் வருவது தடுக்கப்படும். இதிலிருக்கிற அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியைத் தரும். பசு நெய்யின் சத்துகள் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆர்த்ரைட்டிஸ் போன்ற தொற்றாநோய்கள் வருவதைத் தடுக்கும். சிறுவயதிலிருந்தே பசு நெய்யை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு மூளை செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். அல்சைமர், பார்க்கின்சன்ஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். வெள்ளையணுக்களை பலப்படுத்தும் ஆற்றல் பசுநெய்க்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், புற்றுநோய்க்கான சிகிச்சையெடுத்துக் கொண்டிருப்பவர்கள், உடலில் சத்துப்பிடிப்பதற்காக பசு நெய் சாப்பிடலாம்.

Small Millet Barfi

தினை திணை புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தைப் ப லப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தினையைக் கூழாக்கித் தருவார்கள்; அது, தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். இது கபம் தொடர்பான நோய்களை நீக்கும். சாமை சாமையில் அரிசியைவிடப் பலமடங்கு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மற்ற சிறுதானியங்களைவிட சாமையில் இரும்புச்சத்து அதிகம். இது, ரத்தசோகையை நீக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். சாமையில் உள்ள தாதுஉப்புகள் உயிரணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். குதிரைவாலி குதிரைவாலியில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு. வாயுக் கோளாறுகளைத் தீர்க்கும். இடுப்புவலி, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் போன்ற நேரங்களில் குதிரைவாலி களி, குதிரைவாலி கஞ்சி சிறந்த உணவாக இருக்கும்.. வரகு உடலுக்கு அதிகச் சக்தியளிக்கும் வரகில், அரிசி, கோதுமையைவிட நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மைகொண்டது. மேலும் தானியங்களில் அதிகம் புரதம், தாது உப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன. சிறுநீர்ப் பெருக்கி; மலச்சிக்கலை போக்கும்; உடல்பருமனைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவும். கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு வரகு, வரம். கம்பு வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும்; அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். வயிற்றுப் புண் வராமல் தவிர்க்கும். வளரும் குழந்தைகளுக்கும் பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் சிறுநீரைப் பெருக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Traditional rice Barfi

கருப்பு கவுனி அரிசி: கருப்பு கவுனி அரிசி வகையில் உயர்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் கொண்டுள்ளது. அடிப்படையில் கருப்பு அரிசி பயன்பாடு, ஆஸ்த்து மாவின் தக்கதைக் குறைக்கிறது கருப்பு கவுனி அரிசி, கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் கருப்பு கவுனி அரிசி, நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி, ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது. கருப்பு கவுனி அரிசி, கொழுப்பை குறைக்கிறது (LDL- கெட்ட கொழுப்பு இது) கருப்பு கவுனி அரிசி, புற்றுநோயை தடுக்க உதவுகிறது. மாப்பிள்ளை சம்பா: ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் உற்பத்தி செய்ய உதவுகின்றது. தசைகள் மற்றும் திசுக்கள்ளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் புரத சத்ததை சேர்க்க உதவுகின்றது. பூநிலம் (Pro-Anthocyanins) கொண்டுள்ளதால் அதிகளவு சக்கரை(High BP Hyperglycemia) மற்றும் ரத்தத்தை சுத்தரிக்கிறது. உடலின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது. இதில், தனிமம், Iron, Zinc, Manganese, பாஸ்பரஸ், molybdenum, magnesium. இதில் உள்ள நார்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் இதயம் சம்மந்தமான கோளாறு வராமல் தடுக்கின்றது. Celiac குடல் கட்டிகள் வராமல் தடுக்கின்றதது. குளுட்டோன்(Glutton) போல் இருப்பதால் குடும்ப வழிவகை நோய் வராமல் இருக்கும். மூங்கில் அரிசி: மூங்கில் அரிசியில் Low Glycemic Index காரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும் உடலிற்கு தேவையான சத்துக்களை பெற உதவும். வைட்டமின் B6, பாஸ்பரஸ், கால்சியம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது தினசரி பயன்பாட்டில், வாத நோய், மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி நாளடைவில் குறையும்உடலின் தேவையற்ற கொழுப்பினை குறைக்கும்.

sesame barfi

..

peanut Barfi Round

..

puffed shorgam balls

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெள்ளை சோளம் அரிசி, கோதுமையைவிட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளவை சிறுதானியங்கள். ச ோளத்தில் ஆற்றல்-349 கி.கலோரி, புரதம்-10.4 கிராம், கொழுப்பு-1.9 கி, மாவுச்சத்து – 72.6 கி, கால்சியம் – 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் – 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் – 3.1 மி.கி.

sesame balls

..

Fried Gram Balls

..

peanut barfi nice

..

peanut Barfi

..

cashew barfi

..

Nutribar

..

puffed Rice ball

..

Curcumin Turmeric

..

Whole wheat flour

..

Please Wait...